சம்மாந்துறை, செப்டம்பர் 17, 2025
சவுதி அரேபியாவின் இலங்கைத் தூதராக விளங்கும் அதி உத்தம தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, சவுதி அரேபியாவின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் கீழ் இலங்கையின் கிழக்கு மாகாணம், சம்மாந்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட “நூர் சவுதி அரேபியா தன்னார்வத் திட்டத்தை” இன்று (செப்டம்பர் 17) பார்வையிட்டார். இத்திட்டம் பார்வை இழப்பையும் அதனை ஏற்படுத்தும் நோய்களையும் தடுக்கும் நோக்கில் செப்டம்பர் 15 முதல் 21 வரை இலவசமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வையொட்டி சம்மாந்துறை அரச மருத்துவமனையில் சிறப்பு விழா ஒன்று இடம்பெற்றது. அதில் உரையாற்றிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி,
இந்த உயரிய மனிதாபிமானத் திட்டம் சவுதி அரேபிய அரசின் உலகளாவிய மனிதாபிமான பணிப்பாதையை பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், உலக மக்களுக்கு நன்மை செய்வதும், அவசரத்திலுள்ளவர்களுக்கு உதவியும் செய்வது தான் சவுதி அரேபியாவின் அடிப்படை மதிப்புகள் என அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், இரு புனித மசூதிகளின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவூத் மற்றும் அவ்வரசரின் வாரிசு, இளவரசர், பிரதமர் முகம்மது பின் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவூத் ஆகியோரின் தலைமையிலேயே, மனிதாபிமான முயற்சிகளுக்கு சவுதி அரேபியா மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றது என்றார். குறிப்பாக சுகாதார துறையில் தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை பாராட்டத்தக்கது என்றும், இந்நோக்கத்திற்காகவே “சவுதி நூர்” திட்டம் இலங்கையில் கண் நோயாளிகளுக்கான மருத்துவ சேவைகளை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம், அல்-பஸார் சர்வதேச நிறுவனம், சம்மாந்துறை அரச மருத்துவமனையின் பணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு அவர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
அதே நிகழ்வில் உரையாற்றிய சம்மாந்துறை அடிப்படை மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் பிரபாசங்கர், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இம்மிகப்பெரிய மனிதாபிமான உதவிக்காக சவுதி அரசருக்கும் இளவரசருக்கும் தனது நன்றியையும் நெஞ்சார்ந்த பாராட்டையும் தெரிவித்தார். மேலும், இது இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பின் வெளிப்பாடாகும் என்றும், இரு தரப்பினரின் உறவை வலுப்படுத்துவதில் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி ஆற்றும் பங்கையும் சிறப்பித்துப் பாராட்டினார்.
இதனுடன், வரவிருக்கும் “சவுதி நூர் பார்வைத்திறன் பாதுகாப்பு தன்னார்வத் திட்டம்” செப்டம்பர் 22 முதல் 28 வரை எம்பிலிபிட்டிய அடிப்படை மருத்துவமனையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் அறிவித்துள்ளது.
Saudi Ambassador Visits “Noor Saudi Arabia” Volunteer Program in Sammanthurai
Sammanthurai, September 17, 2025 – His Excellency Ambassador Khalid bin Hamoud Alkahtani visited the free Noor Saudi Arabia Volunteer Program to Combat Blindness and Eye Diseases, implemented by the King Salman Humanitarian Aid and Relief Center in Sammanthurai, Eastern Province of Sri Lanka. The program, which runs from September 15 to 21, 2025, provides vital medical care for patients suffering from blindness and related conditions.
An official ceremony was held at the Sammanthurai Government Hospital to mark the occasion. In his address, Ambassador Alkahtani highlighted that this noble humanitarian initiative reflects the core values of the Kingdom of Saudi Arabia—promoting goodwill and extending aid to people in need around the world, in line with its global humanitarian mission.
He further noted that under the leadership of the Custodian of the Two Holy Mosques, King Salman bin Abdulaziz Al-Saud, and His Royal Highness Crown Prince and Prime Minister Mohammed bin Salman bin Abdulaziz Al-Saud, Saudi Arabia continues to prioritize humanitarian initiatives that enhance the quality of life, particularly in the health sector. The Saudi Noor project, he stressed, demonstrates this commitment by providing essential eye care for patients in Sri Lanka.
Ambassador Alkahtani expressed gratitude to the Kingdom’s leadership, the King Salman Humanitarian Aid and Relief Center, the Al-Basar International Foundation, as well as the hospital director and staff in Sammanthurai for their collective efforts in ensuring the success of the program.
Speaking on behalf of the hospital, Dr. Pirabashankar, Director of Sammanthurai Base Hospital, extended sincere appreciation to King Salman and Crown Prince Mohammed bin Salman for their generous humanitarian support. He emphasized that this initiative reflects the strong and long-standing ties between Sri Lanka and Saudi Arabia, while also commending Ambassador Alkahtani’s role in further strengthening bilateral relations across various fields.
The King Salman Humanitarian Aid and Relief Center announced that the next Saudi Noor Volunteer Project to Combat Blindness and Related Diseases will be implemented at the Embilipitiya Base Hospital from September 22 to 28, 2025.


.jpeg)

0 comments :
Post a Comment