ஏம்.ஐ.சம்சுதீன்-
மருதமுனை ஜம்யத்துல் உலமாசபை உலமாக்களுக்கான விஷேட கருத்தரங்கினை நடாத்தியது சுமார் அறுபது வருடங்களாக மருதமுனையில் மார்கரக்க சமய சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மருதமுனை ஜம்யத்துல் உலமா சபையானது அதன் செயற்பாடுகளில் மேலும் உத்வேகத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனது எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் மேற்படி கருத்தரங்கினை ஒழுங்கு செய்துள்ளது என அதன் தலைவர் அஷ்ஷெயிக் அல்ஹாஜ். எம்.ஐ.ஹுஸைபுதீன் (றியாதி) தனது தலைமை உரையில் தெரிவித்தார்.
மருதமுனை மத்திய பள்ளியில் நடைபெற்ற உலமாக்களுக்கான விஷேட கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்து தலைமை உரையாற்றும் போதே மேற்கூறியவாறு தெரிவித்தார்.
கூட்ட அறிமுக உரையை உலமா சபையின் செயலாளர் அஷ;nஷய்க் அல்ஹாஜ்.ஏ.சுபைர் (நளீமி) அறிமுக உரையை நிகழ்த்தினார்.
கிழக்கு பல்கலைக்கழக பிரிவுரையாளர் அஷ்ஷெய்க்.எம்.எச்.ஜலீல்(ஹாமி) உலமா சபையிலன் குறிக்கோள் பணிக்கூற்று நோக்கு செயற்பாடுகள் பற்றிய விளக்கவுரைகளை கணணி மூலம் உலமாக்களுக்கு வழங்கினார்.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆசிரிய கல்வியாளர் அஷ்ஷெய்க் அல்ஹாஜ் .எம்.எம்.ஏ.அகமதுல் அன்சார் மௌலானா (நளீமி) விஷேட உரையின் போது உலமா சபையின் எதிர்காலச்செயற்திட்டங்கள், செயற்பாடுகள் மற்றும் அவற்றை செய்வதற்கான வழிமுறைகள் பற்றி விளக்கினார். 2015ம் ஆண்டிற்கான ஜம்யத்துல் உலமாசபையின் செயற்பாடு செயற்திட்டம் அதன் வேலைத்திட்டம் என்பன எழுத்து வடிவத்தில் உலமாசபையினருக்கு வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.றசான் (நளீமி) செயற்குழு உறுப்பினர் தொகுப்புரை வழங்கினார். அஷ்ஷெய்க்.ஏ.ஆர். பைஸல் கியாஸ் (பலாஹி) உப செயலாளர் நன்றியுரையுடன் கூட்டம் முடிவுற்றது.