“தோப்பாகிய தனிமரம்” – பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் 25ஆவது நினைவேந்தல் மற்றும் “ஓயாத புயலும் சாயாத மரமும்” நூல் வெளியீட்டு



ஏ.எஸ்.எம்.அர்ஹம்-
“தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில், பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்வும், மர்ஹூம் முழக்கம் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களின் “ஓயாத புயலும் சாயாத மரமும்” எனும் தலைப்பில் முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றுப் பதிவுகள் நூல் வெளியீட்டு விழாவும் இன்று (16) நிந்தவூர் அல்-அஷ்ரக் பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமை தாங்கினார்.
மர்ஹூம் முழக்கம் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களின் நூலைப் பற்றி பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் ஆய்வுரையை ஆற்றினார்.

பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொண்டார்.
அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா, கட்சியின் பிரதித் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர் பாசித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், கட்சியின் தேசிய பொருளாளரும் கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர், ஏறாவூர் நகரபிதா நழீம், அட்டாளைச்சேனை நகரபிதா உவைஸ், இறக்காமம் பிரதேச நகரபிதா முஸ்னி, அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தவம், காரைதீவு நகரபிதா சு. பாஸ்கரன், நிந்தவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி, மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள், போராளிகள், மர்ஹூம் முழக்கம் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களின் குடும்பத்தினர் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :