இஹ்திஸாம்-
போதைப் பொருள் சம்பந்தமாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று நேற்று (18) கல்லூரியின் அதாஉல்லா அரங்கில் அதிபர் ஏ.ஜி.அன்வர் தலைமையில் இடம் பெற்றது.
இஸ்லாம் பாட ஆசிரியர் எம்.ஐ.எம்.பைஸால் மௌலவியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும் கிழக்கிலங்கை அரபிக் கல்லூரி அதிபருமான அல்-ஹாஜ் எம்.எம்.ஏ.லெத்தீப் (பஹ்ஜி) போதை வஸ்தும் இன்றைய மாணவர்களும் என்ற தொனிப் பொருளில் உரையாற்றினார். தொடர்ந்து அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் ஆலோசகர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அஸ்ரப் மௌலவி அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் போதைப் பொருள் என்ற தொனிப் பொருளில் விளக்கமளித்தார்.
அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளரும், இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகருமான மௌலவி ஏ.ஆர்.மனாப், கல்லூரியின் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கெண்டனர்.(ந)




