கல்முனை தே.வீ.அ.அதிகார சபையின் உப அலுவலகம் மீள கரையோர மாவட்ட அலுவலகமாக தரமுயர்வு!

அஷரப் ஏ சமத்-
முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவர்கள் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் கல்முனையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் ஒன்று கல்முனை நகரில் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் 2006ல் அது அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொட்டு நீலாவனை வரையிலான 12 கரையோர பிரதேசங்களை உள்ளடக்கி கல்முனை சிட்டி அலுவலகமாகவும் தரமுயர்த்தப்பட்டு இயங்கி வந்தது.

கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவினால் இவ் அலுவலகத்தை மீண்டும் உப அலுவலமாக தரம் குறைக்கப்பட்டு அதன் வருமானப்பகுதி மற்றும் நிதிப்பிரிவுகள் நிர்வாகப் பிரிவுகள் என்பன அம்பாறை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இதன் காரணமாக மக்களும் அதிகாரிகளும் பாரிய சிரமங்களை எதிர்நோக்கிணர்.

இது தொடர்பாக கடந்த காலங்களில் பல அமைப்புக்கள் பல அரசியல்வாதிகள் எடுத்த நடவடிக்கை சாத்தியப்படவையில்லை. முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவும் அவரினால் நியமிக்கப்பட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தiலைவரும் இலங்கையில் 24 மாவட்ட அலுவலகங்களே இருக்க வேண்டும். கல்முனையில் ஒரு மாவட்ட அலுவலகம் தேவையில்லை. என அதனை தடுத்து நிறுத்தி அம்பாறையுடன் இணைத்தனர்.

வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எம். அமீர் அலி அவர்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் இவ்விடயத்தினை கவணத்திற்கொண்டு வந்திருந்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எஸ் பலன்சூரியவை அமைச்சுக்கு அழைத்து கலந்துரையாடியதன் பயனாக மீண்டும் கல்முனை நகர அலுவலமாக செயற்படுவதற்கும் மீள மாவட்ட அலுவலமாகவும் திறந்து வைப்பதற்கும் இணக்கம் தெரிவித்து அதற்கான கடிதத்தையும் பிரதியமைச்சரிடம் அதிகார சபையின் தலைவர் வழங்கினார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -