உருவச்சிலைகள் தொடர்பான தவறான கருத்துக்களுக்கு இன்று தக்க பதில்!

எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்-
காத்தான்குடி பூர்வீக நூதனசாலையிலுள்ள உருவச்சிலைகள் குறித்து, இஸ்லாமிய மார்க்க ரீதியான விளக்கங்களை எடுத்தியம்பும் மாபெரும் மக்கள் சந்திப்பொன்று இன்று (20.05.2015) வியாழக்கிழமை மாலை காத்தான்குடியில் நடைபெறவுள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ள இம்மக்கள் சந்திப்பு நிகழ்வு, காத்தான்குடி இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் மாலை 07:30 மணிக்கு இடம்பெறும்.

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் முன்னிலைப் பிரசாரகர் மௌலவி எம்.சீ.எம். ஸஹ்றான் (மஸ்ஊதி) இம்மக்கள் சந்திப்பில் உருவச்சிலைகள் குறித்து மக்கள் மத்தியில் அரசியல்வாதிகளால் தெரிவிக்கப்பட்டு வரும் தவறான கருத்துக்களுக்கு இஸ்லாமிய மார்க்க ரீதியான தக்க பதில்களை அல்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் தெரிவிக்கவுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி காத்தான்குடி நகர சபை நிர்வாகம் ஏற்பாடு செய்த ஐம்பெரும் எழுச்சி விழாவில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இந்நூதன சாலையிலுள்ள உருவச்சிலைகள் குறித்து அவரது வாதங்களை மக்கள் மன்றத்தில் முன்வைத்ததுடன் இப்பிரதேசத்தின் சிரேஷ்ட உலமாவும், நாடறிந்த இஸ்லாமிய தஃவா அழைப்பாளருமான அல்ஹாஜ் ஏ.எல். ஆதம்லெப்பை (பலாஹி) ஹஸ்ரத் அவர்களையும் மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -