ந.குகதர்சன்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் புலனாய்வு பிரிவினர்களின் அழுத்தங்களுக்கு மத்தியில் முள்ளிவாய்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு நினைவு கூறும் நிகழ்வு வவுணதீவு விளாவட்டுவான் மாரியம்மன் ஆலய முன்றலில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் கே.கோபாலப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு காந்தி சேவா சங்க தலைவர் கே.செல்வேந்திரன், செயலாளர் கதிர் பாரதிதாசன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது முள்ளிவாய்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு நினைவஞ்;சலி செய்யும் வகையில் ஆறு ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஆறு தீபம் ஏற்றப்பட்டது. அத்தோடு உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.
இதன்போது அதிதிகளால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தது.