அபூ றிஜா-
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்திலுள்ள மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம், பாலக்குளி மற்றும் கரடிக்குளி ஆகிய கிராமங்களில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளமையினை எதிர்த்து சிங்கள பேரினவாத இயக்கங்கள் காழ்ப்புனர்வு கொண்டு செயற்படுவதை இட்டு கவலை கொள்வதாகக் இலங்கை பிரஜைகள் ஆலோசனைக் குழவின் தலைவரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய திரு எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தெரிவித்தார்.
வில்பத்து பிரதேசம் மற்றும் முஸ்லிம்கள் மீளக்குடியேறிய பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிட்ட இலங்கை பிரஜைகள் ஆலோசனைக் குழவினர் அங்குள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுடன் வில்பத்து காணி தொடர்பாக கலந்துரையாடியதுடன் மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு இவ்விடயத்தில் நாம் கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் இவற்றுக்கான தீர்வு இறைவனின் அருளினால் நிச்சயமாகக் கிடைக்கும்; எனவும் கூறினார்.
இவை தொடர்பாகக் சகல முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தங்களது பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்ப்பார்ப்பதுடன் இவை தொடர்பான பூரண அறிக்கை ஒன்றை எமது ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இவ்விடயத்தில் மக்களாகிய நாங்கள் பொறுமையுடன் தொழுகையில் பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டனர்.