தமிழ் மாமன்றம் சென்ற வருடம் முதல் நடாத்துகின்ற 'வன்னியின் வாதச்சமர்' எனும் பாடசாலைகளுக்கிடையிலான விவாதப் போட்டியின், இவ் வருடத்திற்கான வன்னியின் வாதச்சமர் 2014 இனுடைய வவுனியா மாவட்ட போட்டிகள் கடந்த 04.10.2014 சனிக்கிழமை ஆரம்பமாகியது.
04.10.2014 மற்றும் 05.10.2014 ஆகிய இரு தினங்களும் நான்கு கட்டங்களாக நடாத்தப்பட்ட தகுதிகாண் சுற்றின் அடிப்படையில், தர வரிசையில் முதல் 8 இடங்களைப் பெற்ற பாடசாலை அணிகள் காலிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 08.10.2014 புதன்கிழமையும், இறுதிப் போட்டி 11.10.2014 சனிக்கிழமையும் இடம் பெறவுள்ளது.
நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் இடம் பெற்ற போட்டிகளில் வழங்கபட்ட புள்ளிகளின் அடிப்படையில்,
1. வ/இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம்
2. வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்
3. வ/புதுக்குளம் மகா வித்தியாலயம்
4. வ/பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயம்
5. வ/கந்தபுரம் வாணி வித்தியாலயம்
6. வ/விபுலானந்த கல்லூரி
7. வ/கனகராயன்குளம் மகா வித்தியாலயம்
8. வ/கோமரசங்குளம் மகா வித்தியாலயம்
முதல் 8 நிலைகளைப் பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
வவுனியா மாவட்ட போட்டிகள் நிறைவெய்தியதும், மன்னார், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான போட்டிகள் நடாத்தப்படவுள்ளது.
0 comments :
Post a Comment