வடமாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் எவ்வித பிரச்சினையும் இல்லை : வாசு­தேவ நாண­யக்­கார


ட­மா­காண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கு­வதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. அவ்­வாறு அரசு தீர்­மானம் எடுத்தால் அதனை வர­வேற்­ப­தாக அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.
இன­வா­தி­களை ஓரம்­கட்­டி­விட்டு தமிழ் மக்­க­ளுக்கு சம உரி­மை­களை வழங்கி நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்ற வேண்­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக சமூக ஒரு­மைப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில், போக்­கு­வ­ரத்து மற்றும் சிறு சிறு குற்­றங்கள் தொடர்­பான முறைப்­பா­டு­களை கையாளும் பொலிஸ் அதி­கா­ரங்­களை மாகாண சபை­க­ளுக்கு வழங்­கு­வது வர­வேற்­புக்­கு­ரி­யது.
விஷே­ட­மாக வட மாகா­ணத்­திற்கு இவ்­வா­றான பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்கி பரீட்­சார்த்­த­மாக அம் மாகா­ணத்தின் செயற்­பா­டு­களை அவ­தா­னிக்க முடியும்.

இவ்­வாறு பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­படும் போது பொலிஸ் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட வேண்டும்.

அவ் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரா­கவும் அக்­கு­ழுவின் அதிக அதி­கா­ர­மு­டை­ய­வ­ரா­கவும் ஜனா­தி­ப­தியே இருப்பார். எனவே பொலிஸ் அதி­கா­ரங்­களை மாகாண சபைகள் தவ­றான வழியில் பயன்­ப­டுத்த முனைந்தால் அதனை ஜனா­தி­ப­தியால் மீளப் பெற­மு­டியும்.

எனவே இன­வா­திகள் சொல்­வதைப் போன்று பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கினால் வட மாகாணம் பிரி­வி­னைக்­கான வழியை தயார்­ப­டுத்தும் என்­பதில் உண்­மை­யில்லை.

மாகாண சபையை அறி­மு­கப்­ப­டுத்தும் போதும் அதி­கா­ரத்தை பர­வ­லாக்­கிய போதும் இந்­திய வம்­சா­வளி மக்­க­ளுக்கு இலங்கை பிர­ஜா­வு­ரிமை வழங்­கிய போதும் சிங்­கள இன­வாதச் சக்­திகள் அவற்றை எதிர்த்­தன. தமிழ் மக்­க­ளுக்கு எந்த உரி­மை­யையும் வழங்கக் கூடா­தென்­பதே இக்­கூட்­டத்தின் பிறவிக் குண­மாகும்.

இதனை மாற்ற முடி­யாது. எனவே இன­வா­தி­களின் கருத்­துக்­களை கவ­னத்தில் எடுக்­காது தமிழ் மக்­க­ளுக்கு சம உரி­மை­களை வழங்க ஜனா­தி­பதி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

அத்­தோடு நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளையும் நிறை­வேற்ற வேண்டும். அவ்­வா­றா­னதோர் நிலையில் எம்­மீ­தான சர்­வ­தேச அழுத்­தங்­களும் நீர்த்துப் போகும். அத்­தோடு இந்­தி­யாவின் பிர­தமர் மோடி ஒரு போதும் ஜெய­ல­லி­தாவின் கோரிக்­கையை ஏற்க மாட்டார்.

ஏனென்றால் இந்­தியா எப்­போதும் இலங்­கையின் இறை­யாண்­மையை மீறாது மதிப்­ப­ளிக்கும். எனவே ஜெய­ல­லி­தாவின் கோரிக்­கைக்கு மோடி செவி சாய்க்க மாட்டார்.
இலங்­கையில் பிரி­வி­னைக்கு தமிழ் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டுமெனக் கூறும் ஜெயலலிதா அப்படியானால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுடன் இணைந்து வாழ்வதற்கும் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டுமென கூற வேண்டும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :