முஸ்லிம் காங்கிரஸ் தனது தனித்துவத்தைகாப்பதில் தவறில்லை-சட்டத்தரணிகபூர்

முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் அமைச்சருமான பசீர்சேகுதாவூத் அரசாங்க கட்சியிலிலிருந்து கொண்டு அக்கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வது தனது மனசாட்சிக்கு விரோதம் என்ரும் அதனால் தனது அமைச்சு பதவியை இராஜனாமா செய்வது பற்றிதான் தீவிரமான யோசிப்பதாகவும் அதன் பின்னரே எதிர் வரும் மாகாணசபைத் தேர்தல்களின் பிரச்சாரவேலைகளில் ஈடுபடபோவதாக அண்மைக் காலங்களில் ஊடகங்களுக்கு வழங்கியசெய்திதொடர்பாக முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக பொதுச்செயலாளரும், மஜிலிஸ் சூராவின் பிரதிதலைவருமானசிரேஷட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்கள் இது தொடர்பாக அமைச்சருக்கு அனுப்பிவைத்தகடிதத்தில் தெரிவித்து இருப்பதாவது:-

அரசின் பங்காளியாக இருப்பதனால் அரசுக்குஆமாம் போட்டுகொண்டுதான் இருக்கவேண்டும் என்ற எவ்வித கடப்பாடோ,உடன்பாடோ மு.காவுக்கு இல்லை.

இந்த அரசில் இருந்து கொண்டு தனித்து களமிறங்குவதில் இன்றையஅரசியல் சூழலில் எவ்விததவறும் இல்லை.

அப்படியென்றால் ஐக்கியதேசியகட்சியின் யானைசின்னத்தில் கடந்தபொதுத் தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் பின் எவ்வாறு வெற்றிலை சின்னத்தில் வெற்றிபெற்ற அரசுடன் கூட்டுசேரமுடியும்?

இதுவும் மனசாட்சிக்குவிரோதமல்லவா?  இன்றைய அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா. என்ற இந்தியஅரசியல் பாணியை இவ் விடத்தில் நினைவு கூற விரும்புகிறேன். 

எனவேஇவ்விடயங்களை பெரிதாககணக்கெடுக்கத் தேவையுமில்லை.

அதற்காக பெரும் அமைச்சுப் பதவியை இராஜனாமா செய்யவேண்டிய அவசியமும்  அவசரமும்  இல்லை என்பதுதான் எனது தாழ்மையான கருத்தாகும்.

இதைபற்றியாரும்  ரோசம் இல்லையா என்றுகேட்பாருமில்லை அந்த ரோசம் உள்ள அரசியல் வாதிகள் இன்று எம் மத்தியிலும் இல்லை.

இன்றைய அரசில் அங்கம் வகிக்கும் அரைவாசி அமைச்சர்கள் ஏற்கனவே ஐக்கிய தேசியகட்சியிலிருந்து ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு மாறி வந்தவர்களே. இதுதான் இந்நாட்டின் இன்றையஅரசியல் யதார்த்தம்.

பலசிரேஸ்ட அமைச்சர்கள் அரசுக்குள் இருந்துகொண்டு இன்னும் அரசாங்கத்தை விமர்சித்து வருவதை நாம் நன்குஅறிவோம்.

மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம்.அஷ;ரப்  1988 ஆம் ஆண்டுகொழும்பு சுகதாசஉள்ளகவிளையாட்டுஅரங்கில் நடைபெற்றகட்சியின் பேராளர் மகாநாட்டில் அப்போதைய ஜனாதிபதி தேர்தலுக்காக சுதந்திரகட்சியின் தலைவர் விசிறிமாவோபண்டார நாயக்வை எதிர்த்தும் ஐக்கியதேசியகட்சியில் போட்டியிட்டமறைந்த ஆர்.பிரேமதாசவுக்கு ஆரதவும் வழங்கினார்.

அதற்காக பிரேமதாசஅவர்கள் வெட்டுப்புள்ளியில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குசெல்வதற்கு வழி வகுத்தபெருமை மறைந்த அக்ஷ்ரப்பையே சாரும்
அதன் பின்னர் இந்த சுதந்திர கட்சியின் சந்திரிக்கா அம்மையாரின் அரசில் அக்ஷ்ரப் அமைச்சராக இருந்து இந்நாட்டுமக்களுக்கும் குறிப்பாகமுஸ்லிம்களுக்கும் அளப்பரியசேவைகள் பலசெய்தும் மறைந்தார். 

இது போன்றுஅரசியலில் தனியானஅரசியல் கட்சிகள் தனித்துக்கேட்பதுசம்பந்தமாகமுடிவுஎடுப்பதில் எவ்விததவறகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஏனைய சிறியகட்சிகள் கூடஅவ்வப்போது அன்று முதல் இன்று வரை பல தனிப்பட்ட முடிவுகளை எடுத்து வந்துள்ளனன.

கடந்தகிழக்குமாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மரசின்னத்தில் போட்டியிட்டுபின்னர் அரசுக்குஆதரவாகவாக்களித்து ஆட்சிபீடம் ஏற்றியபின் கட்சிகண்ட பயன் இதுவரைபெரிதாக எதுவுமில்லை.  

மாறாகதம்புள்ளபள்ளிவாசல் தொடக்கம் தெகிவளை
மகியங்கனை எனபலபள்ளிவாசல்கள் வரை நடந்த கசப்பான சம்பவங்களுக்கு எவ்விதநடவடிக்கைகளும் இந்தஅரசு எடுத்ததாக இன்னும் தான்எந்தச் செய்திகளும் வெளிவரவுமில்லை.எமதுஎதிர்பார்புகளும் நிறைவேறவில்லை.

இந்நிலையில்,மீண்டும் அரசிற்குமுட்டுகொடுக்கும் பணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் முக்கியமாகமுற்றுப்புள்ளிவைக்கவேண்டும் என்றுகட்சிஅரசியல் உயர் பீடமும்,ஆதரவார்களும், ஏனைய முஸ்லிம் அபிமானிகளும் கட்சிநலன் விரும்பிகளும் இதனைஏற்றுக் கொள்கின்றார்கள் அதில் உண்மை இல்லாமலும் இல்லை. 

இச்சூழலில் இது போன்றஏராளமான இன்னும் பலகாரணங்களுக்காக கட்சி எடுத்த முடிவும் சரிஅதேநேரம் நீங்கள் சொல்லும் காரணங்களும் உண்மைதான்  இருப்பினும் இந்நாட்டின் பேரினவாதசக்திகளில் சில தீவிரவாதிகளுக்கு தீன் போடும் அரசின் போக்கைநாம் கண்டும் காணாமல் எவ்வளவுகாலத்திற்கு காத்துகாலம் கடத்துவது? அத்துடன் எங்களை நம்பியவர்களுக்கு நாம் சொல்லும் பதில் என்ன.


எனவேஅவசரப்பட்டுநீங்கள் எந்தமுடிவுகளையும் கட்சியின் கட்டுக்கோப்பிற்கு எதிராக எடுப்பது பற்றியும் அத்துடன் புதிதாக கிடைத்த உங்கள் அமைச்சுப் பதிவியைத் இராஜினாமாசெய்யும் எண்ணத்தை தயவுசெய்துகட்சியின் தவிசாளர் என்றவகையில் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

என இக் கட்சியின் முதல் மூத்தபோராளிஎன்றவகையில் நான் உங்களிடம் வினையமாகவேண்டிக்கொள்கிறேன். 

இல்லையெனில் இன்றையதேர்தல் பிரச்சாரவேலைகளுக்கு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இக்கட்சிக்கு குந்தகமாகஅமைந்துவிட கூடாது இதனைகவனத்தில் கொண்டுசெயற்படுமாறு அக்கடிதத்தில் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்கள் முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் அமைச்சருமான ஜனாப் பசீர் சேகுதாவூத் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :