இஸ்லாமிய சமயம் பற்றியோ.வரலாறு பற்றியோ தெரியாதவர் அமீர் அலி- முபாறக் மஜீட்


லங்கை முஸ்லிம் பெண்களின் கறுப்பு நிற அபாயா இந்த நாட்டின் சீதோஷ்ன நிலைக்கு சரிவராது என்றும் அந்த உடை காரணமாகவே முஸ்லிம்களுக்கெதிரான சிங்கள இனவாதம் வளர காரணமுமாகும் என்ற அமீர் அலி என்பவரின் கூற்றின் மூலம் அவருக்கு இஸ்லாமிய சமயம் பற்றியோ இலங்கை மக்களின் வரலாறு பற்றியோ தெரியாது என்பதையே தெளிவாக காட்டுகிறது என முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.

மேற்படி கருத்து சம்பந்தமாக் முபாறக் மௌலவியை அலை எப் எம் தொடர்புகொண்டு வினவிய போதே இவ்வாறு அவர் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

பெண்களின் கறுப்பு நிற ஆடையும், ஆண்களின் தாடியும், ஜுப்பாவும் சிங்கள இனவாதம் வளர காரணம் என்பதாயின் 1915ம் ஆண்டு இந்த நாட்டில் சி;ங்கள முஸ்லிம் கலவரம் ஏற்பட்டது ஏன்? அப்போது பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் கறுப்பு நிற ஆடை அணிவதில்லை. அத்துடன் ஆண்கள் தாடி வைத்திருந்தாலும் ஜுப்பா அணிந்திருக்கவில்லை. ஆனாலும் கலவரம் ஏற்பட்டது.

அதே போல் சிங்களவரும் தமிழர்களும் ஒரே கடவுள்களைத்தான் பெரும்பாலும் வணங்குகிறார்கள். அவர்களின் பெயர்களில் கூட நிறைய ஒற்றுமை உள்ளது. குமார் என்பது குமார என்றும், கமலா என்பது அதே பெயரிலும் இருந்தும் சிங்கள பேரினவாதம் தமிழர்கள் மீது பாய்ந்தது என்றால் அதற்கு தமிழர்களின் மதமோ, ஆடையோ, பெயரோ அல்ல, மாறாக சிங்கள இனவாதிகளின் அடக்கு முறை குனமாகும் என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆக முஸ்லிம்கள் மீதான சிங்கள இனவாதத்துக்கும் காரணம் அபாயாவோ ஜுப்பாவோ அல்ல மாறாக சிறுபான்மை மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்ற மேலாதிக்க சிந்தனையே காரணமாகும்.

கறுப்பு நிற ஆடை என்பது நமது நாட்டு சூழ்நிலைக்கு பொருத்தமற்றது என்பது மடத்தனமான வாதமாகும். ஆண்கள் கறுப்பு நிற கோட் சூட் அணிந்து போதாதற்கு டை கூட அணிவதை நாம் காண்கிறோம். மிகவும் கனதியான இந்த ஆடை நமது நாட்டுக்கு கொஞ்சமும் ஒத்து வராது என்று தெரிந்தும் அதனை அணிந்து அவிவதை காண்கிறோம். முஸ்லிம் பெண்களின் கறுப்பு ஆடை என்பது கோட்டுக்கு தேவையானது போன்ற கனமான துணி அல்ல. ஒரு பெண் பாவாடை சட்டை அணிந்து அதற்கு மேலால் சாறியை சுற்றோ சுற்று என சுற்றி அப்படியிருந்தும் உடலின் அரைவாசியை காட்டி அவதிப்படுவதை விட சீதோஷ்னத்துக்கு மிகவும் இடம் கொடுக்கும் ஆடையே கறுப்பு நிற ஆடையாகும். 

பாலைவன வெயிலக்கே இது உகந்ததாயின் நமது நாட்டுக்கு மிகவும் உகந்தது என்பதை விளக்கத்தேவையில்லை. இந்த ஆடை மூலம் முஸ்லிம் பெண்களிடையே ஆடைகளில் ஏற்றத்தாழ்வு இல்லாத சமமான தன்மையை காண்கிறோம். இது இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை பறை சாற்றும் உடையாகும்.

பாடசாலைகளில் வெள்ளை நிற சீருடை இருப்பதற்கு முக்கிய காரணம் மாணவர்கள் மத்தியில்; ஆடையில் ஏற்றத்தாழ்வு தெரியக்கூடாது என்பதற்கேயாகும். அதே போல் கறுப்பு நிற ஆடை பெண்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வை நீக்குகிறது.

கறுப்பு நிற ஆடையை உலகளாவிய முஸ்லிம்கள் அணிவது என்பது இன்று நேற்று தோன்றியதல்ல. இயேசு நாதரின் (அலை) தாயாரான அன்னை மர்யம் என்ற முஸ்லிம் பெண்மனி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் கறுப்பு நிற ஆடை அணிந்து தலையையும் மூடியிருந்தார் என்பதை அவர் சம்பந்தமான ஓவியங்கள் தெரிவிக்கின்றன. அன்னை மர்யமின் பெயர் மட்டுமே குர்ஆனில் பெயர் கூறப்பட்டுள்ள ஒரேயொரு முஸ்லிம் பெண்ணாகும்.

இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல. சிங்களவர் இந்த நாட்டுக்கு பௌத்தர்களாக வரவில்லை. அத்துடன் சிங்களவரும் பௌத்தமும் மிக அண்மைக்காலத்திலேயே அதாவது சுமார் இரண்டாயிரத்தி அறுநூறு வருடங்களுக்கு முன்பே இலங்கைக்கு வந்தன. ஆனால் முஸ்லிம்கள் பல லட்ச வருடங்களாய் இந்த நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். உலகளாவிய முஸ்லிம்களுக்கே தாய் நாடு இலங்கைதான். இந்த நிலையில் இனவாதிகளுக்கு பயந்து முஸ்லிம்கள் தமது தனித்துவத்தை விட்டுக்கெடுக்க முடியாது.

இந்தோனேசியா, மலேசியா என்பன வெள்ளையர்களின் பிடியில் இருந்து இஸ்லாமிய அறிவு ஒழிக்கப்பட்ட நாடுகளாகும். இப்போதுதான் அங்கு கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய அறிவு மேலோங்கி வருகிறது. முஸ்லிம்களுக்கு வழிகாட்டல் என்பது சஊதியோ இந்தோனிசியாவோ அல்ல என்பதை அமீரலி போன்றவர்கள் தெரிந்;து கொள்ள வேண்டும். இஸ்லாமிய அறிவில் இந்தோனேசிய பெண்ணை விட இலங்கை முஸ்லிம் பெண் முதன்மையானவள் என்பதை எம்மால் உறுதியாக கூற முடியும்.

இவ்வாறான அறவிலிகள் எதிர் காலத்தில் இனவாதம் ஒழிவதாயின் முஸ்லிம்கள்; தமது பெயர்களை சிங்கள பெயர்களாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்று கூட முட்டாள்தனமாக சொன்னாலும் சொல்வர். ஆகவே முஸ்லிம் சமூகம் விழிப்பாக இருப்பதுடன் இததகைய கருத்துக்களை கூறிய அமிரலி என்பவர் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பதுடன் முஸ்லிம்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :