இக்காட்டான கட்டத்தில் SLMC தலைவரை தொலைபேசியில் தொடர்புகொள்ளமுடிய வில்லை-எஹியா

புத்தளம் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் வடமேல் மாகாகண சபை உறுப்பினருமான எஸ்.ஏ. எஹியாவை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹியாவை தொடர்புகொண்டு வினவியபோது பின்வரும் கருத்துக்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

நேற்று புதன்கிழமை வடமேல் மாகாண சபையில் இடம்பெற்ற 13ஆவது திருத்த சட்டத்தில் திருத்தங்களை மேற் கொள்வதற்கு அங்கிகாரம் வழங்குவது தொடர்பான பிரேரணைக்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்கும் முடிவுடனேயே சபைக்குச் சென்றோம். 

மாகாண சபையில் எமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குருநாகல் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக கடுமையானதொனியில் உரையாற்றியதுடன் இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாகவும் கூறினார்.

சபை இடைவேளையின்போது மாகாணத்தில் அதிகாரமுள்ளவர்கள் எம்மிடம் கடுமையாக வாதிட்டனர். அச்சந்தர்ப்பத்தில் புத்தளம் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்னவும் எம்முடன் வாதிட்டார். மாகாண முதலமைச்சர் கொண்டு வந்த இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால் உடனடியாக நீங்கள் எதிர்க்கட்சியில் அமருங்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் அரச நியமனங்களையும் உடனடியாக இரத்துச் செய்வோம் என்று வாதிட்டனர்.

இதுதொடர்பாக எமது தலைமைத்துவத்துடன் தொடர்பு கொண்டோம். பலமுறை தொடர்பு கொண்டும் பதில் கிடைக்கவில்லை. இதனால் நாம் ஓர் இக்கட்டான நிலைக்கு உள்ளானோம். 

மக்களுக்காக கட்சியா? கட்சிக்காக மக்களா? என்று தீர்மானிக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை. புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டத்திற்கு 20 அரச நியமனங்கள் கிடைத்த நிலையில் அந்த நியமனங்களை நாம் இழக்க முடியாத நிலை. எமது தலைமைத்துவத்திலிருந்து முடிவுகள் ஏதும் கிடைக்காத நிலையில் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தோம்.

இது விடயம் தொடர்பாக இதுவரை எம்மை அழைத்து கட்சி எதுவும் கேட்கவில்லை. மாகாண சபையில் ஆளும்தரப்பில் இருந்து கொண்டு மத்திய அரசினூடாக நியமனங்களைப் பெற்றுத்தருமாறு பலமுறை கேட்டுள்ளோம். புத்தளம் மாட்ட மக்களுக்காக பல விடயங்களை கேட்டும் எமக்கு தோல்விகளே ஏற்பட்டன.

கிழக்கு மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட திவிநெகும சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும்படி கட்சி செயலாளரும் கட்சி தலைமைத்துவமும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு கூறியும் அரசுக்கு ஆதரவாகவே அவர்கள் வாக்களித்தனர். அப்படியானால் கிழக்கிற்கு ஒரு சட்டம் கிழக்கிற்கு வெளியேயுள்ள மக்களுக்கு ஒரு சட்டமா என்று கேள்வியெழுப்பினார்.

இவ்வாறான சூழ்நிலையில் கட்சியை விட்டு இடைநிறுத்தனாலும் விலக்கினாலும் மக்களுக்காக நாம் எதையும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று எஹியா தெரிவித்தார்.NM

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :