கார் ஏற்றிவந்த கனரக வாகனமும் கார்களும் தீயில் கருகியுள்ளது.

தாய்லாந்தி உயர் ரக கார்களை ஏற்றிச் சென்ற கனர வாகனமொன்று தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்த பல கோடி ரூபா பெறுமதி வாய்ந்த பல கார்கள் தீயில் கருகியுள்ளது.

தாய்லாந்தில் நாகோன் ராட்சசீமா மாகாணத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீப்பிடித்து எரிந்த குறித்த கனரக வாகனத்தில் பெராரி 430, லம்போர்கினி மூர்சிலாகோ எல்.பி640, பென்ட்லீ கொன்டினென்டல் ப்ளையிங் ஸ்பர், பி.எம்.டபிள்யூ எக்ஸ்6 உள்ளிட்ட பல உயர்ரக விலை உயர்ந்த கார்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.

வழியில் நடு வீதியில் வைத்து கனரக வாகனம் தீப்பிடிக்க தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் வருவதற்குள் பல உயர்ரக வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளது. இதனால் சுமார் 41.62 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும் குறித்த கனரக வாகனத்தை ஓட்டிச்சென்ற சாரதி மீது பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :