இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சாதிக்கும் என அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜுன் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரில் பங்குபெறவுள்ள மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி இங்கிலாந்து சென்றுள்ளது.
மெத்தியூஸின் தலைமையில் இலங்கை அணி பங்கேற்கும் முதலாவது முக்கிய தொடர் இதுவாகும்.
இந்நிலையில் மெத்தியூஸ் கூறுகையில், இத்தொடரில் இலங்கை அணி சிறப்பான பெறுபேறுகளை வெளிக்காட்டும். தற்போதைய அணியில் இடம்பெற்றுள்ள மூத்த மற்றும் இளம் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி எதிரணிகளுக்கு சவாலாக இருப்பார்கள்.
ஐ.பி.எல் போட்டிகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்குமிடையில் பாரிய வித்தியாசம் உண்டு. நானும் அணி வீரர்களும் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்துவோம் என இலங்கை அணியின் தலைவர் மெத்தியூஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் 2009ஆம் இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடர் உட்பட இறுதியாக நடைபெற்ற முக்கியமான 6 தொடர்களில் 4 இல் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment