தமிழகத்தின் விழுப்புரம் அருகே கள்ளக்காதலை ஊரார் கேலி செய்ததால் அவமானம் அடைந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே மட்டிகை கிராமத்தை சேர்ந்தவர் குமரவேலு. இவரது மனைவி குமாரி (வயது 35). குமரவேலு கரூர் மாவட்டம் காங்கேயத்தில் தங்கி கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே குமாரி அதே பகுதியை சேர்ந்த திருமணமான வாலிபர் சரவணன் என்பவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததாக கூறுப்படுகிறது.
இதனை அறிந்த குமாரியின் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் குமாரியை கேலி-கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் அவமானம் அடைந்த குமாரி வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்த அவரை சரவணன் காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின்னர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமாரி இறந்து போனார். சரவணன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திருநாவலூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments :
Post a Comment