கனடாவில், 400 ஆண்டுகளுக்கு முன் புதைந்த மரத்தின் தண்டுப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.


னடாவில் பனிப்பாறைகளில், 400 ஆண்டுகளுக்கு முன் புதைந்த மரத் தண்டுகளில்,தற்போது வளர்ச்சி காணப்படுவதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கனடா நாட்டின், அல்பர்டா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பிரிட்டன் ஆய்வாளர்களுடன் இணைந்து, பனிப்பாறைகளில் புதையுண்ட மரங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கனடாவில், வெப்பம் காரணமாக, பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால்,அப்பகுதியில், பல நூறு ஆண்டுகளுக்கு முன் புதைந்த மரங்கள், தற்போது வெளியில் தெரிகின்றன.

ஆய்வாளர்களின் தேடலில், 400 ஆண்டுகளுக்கு முன் புதைந்த, மரத்தின் தண்டுப் பகுதி கிடைத்தது. இதை, பிரிட்டன் ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அதில் புதிய கிளைகள் முளைத்தன.

இதுகுறித்து, ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்ததாவது,

கனடாவில், 400 ஆண்டுகளுக்கு முன் புதைந்த மரத்தின் தண்டுப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இவை, "பிராயோபையிட்ஸ்´ என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகை மரங்கள், வெட்டுப்பட்ட பின்னும், உயிர் வாழ்கின்றன.

பனிப்பாறை இடுக்கில் சிக்கிக் கொள்வதால், இதன் வளர்ச்சி தடைபடுகிறது. சாதகமான தட்பவெட்ப நிலை நிலவும் போது, மீண்டும் வளர்கின்றன.

ஆய்வகத்தில், தகுந்த தட்பவெட்ப நிலை கிடைத்ததால், தண்டு மீண்டும் வளரத் தொடங்கியுள்ளது. இவ்வகை மரங்கள், தரையில் வளரும், சாதாரண மரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :