கிரிக்கெட் வீரர்களுக்கு சூதாட்ட தரகர்கள் பட்டப் பெயர்களை வைத்து அதனையே பயன்படுத்தியுள்ளனர்.இதன்படி இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட்டின் கடவுள், டென்டியா, லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் போன்ற பெயர்களால் இரசிகர்கள் போற்றி வருகின்றனர்.
ஆனால் புக்கிகள் அவருக்கு இட்ட பெயர் பட்கு என்பதாகும். ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கிய தரகர்களின் மடிக்கனிணிகள், நாற்குறிப்பு மற்றும் ஐபேட்களில் இது உள்
ஹிந்தியில் பட்கு என்றால் குள்ளமாக உள்ளவர்களை கேலி செய்யும் வகையில் பயன்படுத்தப்படும் சொல். நம் ஊரில் கட்டையன் என்று சொல்வது போன்று.
இதேவேளை, டோணி ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதால் அவருக்கு ஹெலிகாப்டர் என்று பெயர் வைத்துள்ளனர். மலிங்கவுக்கு மக்கி என்று பெயர் வைத்துள்ளனர்.
தரகர்கள் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை பயன்படுத்தாமல் அவர்களுக்கு தாங்கள் வைத்த பட்டப்பெயர்களைத் தான் பயன்படுத்தி வந்துள்ளனர். ஏனென்றால் வேறு யாராவது கேட்டாலும் அவர்களுக்கு அந்த பெயர் புரியாதல்லவா.
0 comments :
Post a Comment