பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு வர்ணங்கள்

Share on
பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் பஸ் வண்டிகளை இலகுவில் அடையாளம் காணும் நோக்கில் அவற்றுக்கு மூன்று வகையான வர்ணங்களைப் பூசுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான பிரேரணையை போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம முன்வைத்துள்ளதுடன் அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளுக்கு
சிவப்பு
நிறமும் தனியார் பஸ் வண்டிகளுக்கு
நீல
நிறமும் பாடசாலை பஸ் வண்டிகளுக்கு
மஞ்சள்
நிறமும் பூசப்படவுள்ளன.

தற்போதைய நிலைமையில் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 45 இலட்சமாகும். இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்களின் எண்ணிக்கை 20 ஆயிரம் ஆகவுள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வேன்களின் எண்ணிக்கை 2 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :