ஆசிரியையின் கடன்அட்டையைத் திருடி பணமெடுத்த பௌத்த துறவி கைது

Share on

பலாங்கொடை பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரின் கடன்அட்டையைத் திருடி ஏ.ரி.எம். இயந்திரம் மூலம் பணமெடுத்ததாகக் சந்தேகிக்கப்படும் பௌத்த துறவி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி ஆசிரியையின் கடனட்டையைத் திருடி நான்கு சந்தர்ப்பங்களில் பணம் மீள எடுக்கப்பட்டுள்ளமை ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்டிருந்த கமெரா மூலம் பதிவாகியுள்ளது. இதனை வைத்த
ே மேற்படி சந்தேக நபர் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை பொலிஸார் பலாங்கொடை நீதிவான் திருமதி. ஜீ.ஏ.ஆர். ஆட்டிக்கல முன் ஆஜர்செய்தபோது அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :