பஸ் கவிழ்ந்ததால் திருமணத்திற்கு சென்ற 15 பெண்கள் பரிதாப மரணம்

Share on
திருமணத்துக்கு சென்ற போது மலை உச்சியில் இருந்து மினி பஸ் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். ஏமனில் நடந்த இந்த பயங்கர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஏமனில் உள்ள ஹஜா மாகாண கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், உறவினர்கள் திருமணத்தில் பங்கேற்க மினி பஸ்சில் நேற்று புறப்பட
்டனர். பஸ்சில் 30க்கும் அதிகமானோர் இருந்தனர். மலை பாதையை கடந்து திருமணம் நடக்கும் இடத்துக்கு சென்று கொண்டிருந்த போது, திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து உருண்டு பாறைகளுக்கு நடுவில் விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பெண்கள் பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து மீட்புப் படையினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களையும் இறந்தவர்களின் சடலங்களையும் மீட்டனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி சென்றதால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :