அன்னார் இலங்கை மின்சார சபையில் (CEB) நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி ஓய்வு பெற்றதுடன், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை ஆன்மீகப் பணிகளுக்கும் சமூக சேவைகளுக்கும் அர்ப்பணித்த உயர்ந்த மனிதராகத் திகழ்ந்தார். சமூக நலன், மனிதாபிமானம் மற்றும் பொதுச்சேவையில் எப்போதும் முன்னின்று செயற்பட்ட அவர், பலரின் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்தார்.
எனது சமூக சேவைப் பயணத்திலும் அரசியல் நடவடிக்கைகளிலும், வெற்றிப் பாதையிலும் என்னோடு தோளோடு தோள் நின்று பயணித்த உண்மையான நண்பராக அன்னார் விளங்கினார். “C.E.B. முகம்மது” என்று அன்போடு நாம் அழைத்த அந்த நண்பனின் இழப்பு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
இன்று அவர் எம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும், அவர் ஆற்றிய நற்செயல்களும் மனிதநேயப் பணிகளும் எங்கள் நினைவுகளிலும் சமூகத்தின் வரலாற்றிலும் என்றும் நிலைத்திருக்கும்.
“ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கும்” என்ற அல்லாஹ்வின் நியதிப்படி, நண்பா... நீ முந்திவிட்டாய்; நாங்கள் பின்னால் வருகிறோம்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, கப்ரை விசாலமாக்கி, நூரால் நிரப்பி, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை அருள்வானாக. மேலும், அன்னாரின் குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் இந்த பேரிழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும் அழகிய பொறுமையையும் வழங்குவானாக.
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأسكنه فسيح جناتك
ஆமீன்... ஆமீன்... யா ரப்பல் ஆலமீன்.
ஆழ்ந்த அனுதாபங்களுடன்,
ரஹ்மத் மன்சூர்
தலைவர்
ரஹ்மத் பவுண்டேசன்
கல்முனை

0 comments :
Post a Comment