நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும், சமூக சேவகருமான ஏ.கே. அப்துல் சமத் அவர்களின் மறைவு தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“சகோதரர் அப்துல் சமத் அவர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் முன்னின்ற ஓர் உன்னத சமூக சேவகராகத் திகழ்ந்தார். தனது சொந்த பொருளாதார வளங்களைப் பற்றிக் கவலைப்படாது, பிரதேச மக்களின் நலனுக்காக விருப்பத்துடன் செலவிட்டு வந்த மனிதநேயமிக்க நபராக அவர் விளங்கினார்.
தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல், மக்கள் சேவைக்காகவே தனது நேரத்தையும் வளங்களையும் அர்ப்பணித்தவர். எப்போதும் சிரித்த முகத்துடனும் அன்பான அணுகுமுறையுடனும் அனைவருடனும் பழகிய அவர், வறிய மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் ஊரின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் மிகுந்த அக்கறையுடனும் துடிப்புடனும் செயல்பட்டு வந்தார்.
மத்திய முகாம் மற்றும் கொலனிப் பகுதி மக்களுக்கு அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது. அவர் எனது அரசியல் பயணத்துக்கு எப்போதும் துணைநின்று ஒத்துழைப்பு வழங்கிய உற்ற நண்பராக இருந்தார். அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த கவலையையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது பிரிவு சாதாரணமாக கடந்து செல்ல முடியாத பேரிழப்பாகும். எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு மேலான சுவனபதியை வழங்குவானாக. அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கலாநிதி ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment