சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றிய அங்கத்தவர்களுக்கான விசேட மருத்துவ முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது



எம்.எஸ்.எம். ஸாகிர்-

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் உடல்நல மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட மருத்துவ முகாம் நேற்று (13) சனிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்றது.

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியமும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மருத்துவ முகாம், தொற்றா நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஆரோக்கிய உடல் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

முகாமில் பங்கேற்ற ஒன்றிய அங்கத்தவர்களுக்கு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல் அளவு, சிறுநீரக செயல்பாடு, கண் பரிசோதனை, உடல் பருமன், உடல் நிறைச் சுட்டெண் (BMI), உயரம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் தொடர்பான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பரின் நெறிப்படுத்தலிலும், சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் தலைவர், முன்னாள் அதிபரும் கலாபூஷண விருதுபெற்றவருமான ஏ. பீர் முஹம்மட் அவர்களின் தலைமையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது.

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது உடல்நிலை தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு பயன்பெற்றதுடன், இவ்வாறான மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

இந்நிகழ்வில் சுகாதாரக் கல்வி தாதியர் அலுவலர் மதுசாலினி உள்ளிட்ட மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினர். அவர்களின் பங்களிப்பு நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நிகழ்வின் நிறைவில், மருத்துவ முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்திய சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் அவர்களுக்கு சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் சார்பில் நினைவுச் சின்னம் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், குறுகிய காலத்திற்குள் இம்மருத்துவ முகாமை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் தலைவர் கலாபூஷணம் ஏ. பீர் முஹம்மட், பொதுச்செயலாளர் எம்.எம். உதுமாலெப்பை மற்றும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் ஆகியோருக்கு ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் தமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :