லண்டனில் வதியும் சாய்ந்தமருது சிறுமி மர்யம் ஜெஸீம் உலக ஹிஜாப் தின மகா நாட்டை நிகழ் நிலை ஊடாக ஆரம்பித்து வைத்தார்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
க்கிய அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல் படும் உலக ஹிஜாப் தின அமைப்பின் ஸ்தாபகர் , சகோதரி நஸ்ம கானின் அழைப்பை ஏற்று, நிகழ் நிலை ஊடாக இடம்பெற்ற 'உலக ஹிஜாப் தின மாநாட்டை லண்டனில் வதியும் சாய்ந்தமருதைச் சேர்ந்த மர்யம் ஜெஸீம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

சென்ற ஆண்டும் இவ்வுலக ஹிஜாப் மாநாட்டை ஆரம்பித்து வைத்தது மட்டுமல்லாமல் ஐக்கிய இராஜ்ஜியத்தில் இயங்கும் பிரபல இஸ்லாமிய தொலைக்காட்சியான இஸ்லாம் சணல் தொலைக்காட்சியின் டுடேய்ஸ் ஷோ எனப்படும் நிகழ் நிலை நிகழ்ச்சிக்கும் நேர்முகம் காண அழைக்கப்பட்டு தனது ஹிஜாப் அனுபவங்கள், அதனை அணிவதன் முக்கியத்துவம் மற்றும் உலக ஹிஜாப் தின நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :