கல்முனை மைமூனா சமூக அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில், மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்திற்கான இணையத்தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், சிறப்பு கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (16) கல்முனை கமு/கமு/அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் பி.எம். முஹைதீன் மண்டபத்தில் நடைபெற்றது.
மைமூனா சமூக அபிவிருத்தி அமையத்தின் தலைவர், மூத்த மனநல ஆலோசகர் என்.எம். நௌஸாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்திற்கான kmlac.com இணையத்தளம் மெடிலேன்ட் வைத்தியசாலையின் பணிப்பாளரும், மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தின் ஆலோசகருமான வைத்தியர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது, கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக சிறப்பாக சேவையாற்றி, தற்போது கிழக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளராக பதவி உயர்வு பெற்று சென்றுள்ள ஏ.டி.எம். ராபி அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் எம். நௌசாத் ஆதம்பாவா அவர்கள் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
மேலும், சர்வதேச தரத்திலான MRICS தகைமையில் சித்தியடைந்துள்ள ஏ.எல். பஸ்மின் அவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தின் அதிபர் மௌலவி ஏ.எல். நாசர், கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹாவின் தலைவர் எம்.எல். அப்துல் அஸீஸ், அதன் செயலாளர் எம்.எச்.எம். முபாரிஸ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளைத் தலைவர் ஏ.எல்.எம். முர்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தின் ஆலோசனை சபை உறுப்பினர்களான சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எல்.எம். அப்துல் ஹலீம், பொறியியலாளர் எம்.எம். றிஸ்கான், இப்றா அரிசி ஆலையின் உரிமையாளர் எஸ்.எல்.எம். நயீர், முன்னாள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஏ.எம். ஹனிபா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும், கமு/அல் பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். பைசால், கமு/அஷ் ஷுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா உள்ளிட்ட கல்வியாளர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத் உலமா சபை, ஜம்இய்யத்துல் உலமா சபை, பதுரியா ஜும்ஆ பள்ளிவாசல், இஸ்லாமாபாத் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல், ஹாமி ஜும்ஆ பள்ளிவாசல், கிரீன்பீல்ட் முஹ்யித்தீன் மஸ்ஜித், கல்முனை மாநகர பொதுச்சந்தை வர்த்தக சங்கம், கல்முனை சமூக மேம்பாட்டு மன்றம், கல்முனையான்ஸ் போரம், ஈராக் நட்புறவு ஒன்றியம், அஸ்டோ அமையம், அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத் பேரவை ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், திறந்த பல்கலைக்கழகம் மற்றும் சட்டக்கல்லூரி நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்தவர்கள், மைமூனியா ஆலிமாக்கள், பெற்றோர்கள், மாணவிகள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தின் கல்வி மற்றும் சமூகப் பணிகளை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக பரந்தளவில் கொண்டு செல்வதற்கான முக்கியமான முன்னெடுப்பாக இந்த இணையத்தள ஆரம்பிப்பு அமையுமென நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.



















0 comments :
Post a Comment