பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்தினை அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசினை 02.02.2023. வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு அதிகாரிகளினால் டிஜிட்டல் தாராசு ஒன்றினை பறிமுதல் செய்துள்ளனர் .
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவ
மேல்பிரிவு தோட்டப்பகுதியில் தொழிலாளர்களால் பச்சை தேயிலை கொழுந்து பறிக்கப்பட்டு அதனை அளவீடு செய்து கொண்டிருந்த வேளை குறித்த அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் பொறுப்பதிகாரி ஆரியபால தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பச்சை தேயிலை கொழுந்து அளவீடு் செய்யப்படும் டிஜிட்டல் தாராசு முன்று வருடகாலமாக முத்திரை பதிக்கப்படாமல் காணப்பட்டதோடு இறுதியாக 2020ம் ஆண்டு 12ம் மாதம் முத்திரை பதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தொழிலாளி 15கிலோ பச்சை தேயிலை கொழுந்து பறித்ததை அளவீடு செய்யும் போது தோட்ட நிர்வாகத்தின் ஊடாக 03 கிலோவும் பத்து கிலோ இருந்தால் இரண்டு கிலோவும் ஜந்து கிலோ பறிக்கப்பட்டால் ஒரு கிலோவை தோட்ட நிர்வாகம் பெற்றுக்கொள்வதாக ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்ரஸின் ஊடாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை குறித்த தாராசினை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டு குறித்த பொகவந்தலாவ தோட்ட
நிர்வாகத்திற்கு எதிராக வழங்கு தொடர உள்ளதாக தெரிவித்தனர் .

0 comments :
Post a Comment