தென்கிழக்குப் பல்கலைக்கழக் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் உமர் பாரூக் கௌரவித்து வழியனுப்பி வைப்பு!



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடனும் திறமையுடனும் பணியாற்றிய சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாரூக் அவர்களை கௌரவித்து வழியனுப்பிவைக்கும் நிகழ்வு 2026.06.24 ஆம் திகதி பீடத்தின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பீடத்தின் கல்வி மற்றும் நிருவாகச் செயற்பாடுகளின் முன்னேற்றத்திற்காக உமர் பாரூக் அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகள் நினைவுகூரப்பட்டன.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா அவர்கள், முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் வளர்ச்சிப் பயணத்தில் உமர் பாரூக் அவர்கள் வகித்த பங்களிப்பு அளப்பரியது எனக் குறிப்பிட்டார். நிருவாக நடவடிக்கைகளின் திறம்படையான முன்னெடுப்பிலும், கல்விசார் மற்றும் மாணவர் நலச் செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்பிலும் அவர் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு அனைவராலும் பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சிரேஷ்ட பேராசிரியர்களான பேராசிரியர் ஏ.எல். அப்துல் ரவூப் மற்றும் பேராசிரியர் ஏ. ஜௌபர் ஆகியோர் இணைந்து நினைவுச் சின்னத்தையும் கௌரவிப்புப் பரிசையும் வழங்கி உமர் பாரூக் அவர்களை கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் பிரதிப் பதிவாளர் ஐ.எல். தஸ்லீன் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் கல்விசார் பணியாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அண்மையில் பீடத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள புதிய உதவிப் பதிவாளர் விதுசன் திஷானி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில், எம்.எஸ். உமர் பாரூக் அவர்கள் தனது சேவைக் காலத்தில் தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய பீடாதிபதி, கல்விசார் பணியாளர்கள், நிருவாக ஊழியர்கள் மற்றும் சக உத்தியோகத்தர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், தாம் புதிய பொறுப்பிடத்திலும் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக உறுதியளித்தார்.

உணர்வுபூர்வமான சூழலில் நடைபெற்ற இந்நிகழ்வு, எம்.எஸ். உமர் பாரூக் அவர்களின் சிறப்பான சேவைகளைப் பாராட்டும் வகையிலும், அவரது எதிர்கால பணிப் பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.









 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :