கல்முனை ஸாஹிரா கல்லூரி O/L 2025 பெறுபேறுகளில் சிறப்புச் சாதனை!



12 மாணவர்களுக்கு 9A – 81.5% உயர்தரக் கல்வித் தகுதி

எம்.வை. அமீர்-

ல்முனை ஸாஹிரா கல்லூரி தேசியப் பாடசாலை, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சைப் பெறுபேறுகளில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது.

பரீட்சைக்கு விண்ணப்பித்த 297 மாணவர்களில் 292 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்களில் 260 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்து, பாடசாலை 89% மொத்த சித்தி விகிதத்தை பதிவு செய்துள்ளது.

மேலும், உயர்தரக் கல்விக்குத் தகுதிபெறுவதற்குத் தேவையான தமிழ் மற்றும் கணிதப் பாடங்களுடன் குறைந்தபட்சம் 3C மற்றும் 3S பெறுபேறுகளைப் பெற்று 238 மாணவர்கள் உயர்தரக் கல்விக்குத் தகுதி பெற்றுள்ளனர். இது 81.5% உயர்தரத் தகுதி விகிதமாகும்.

இம்முறை நடைபெற்ற பரீட்சையில் 12 மாணவர்கள் அனைத்து ஒன்பது பாடங்களிலும் A சித்தி (9A) பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அதேவேளை, 19 மாணவர்கள் 8A மற்றும் 14 மாணவர்கள் 7A பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளனர்.

9A சித்தி பெற்ற மாணவர்கள்

நௌஷாத் அப்துல்லா ஷப்கி
முகம்மட் காமில் மொஹமட் கனாஸ்
அலியார் முகம்மட் ஆபிர் அஹ்ஷாப்
இர்ஷாத் கான் மொஹமட் ஆகில் கான்
நிஸார் முகம்மட் அன்ஷிப்
நிஜாமுத்தீன் முகம்மட் அக்ஷாத்
முகம்மட் ஸாக்கி மொஹமட் ஸாபித்
ஜானூஸ் முகம்மட் ரஹ்பத் ஸரோஷ்
முகம்மட் அர்ஜில் ஷிமாஸ் அஹமட்
சாம்சுதீன் முகம்மட் சாபித்
முகம்மட் ரிஸ்வான் முகம்மட் அசால்
ஜலால்தீன் அப்தாப் அஹ்மட்


பாடவாரியான சித்தி விகிதங்கள்
இஸ்லாம் – 97.95%
தமிழ் மொழி மற்றும் இலக்கியம் – 89.35%
ஆங்கிலம் – 93.45%
கணிதம் – 84.93%
வரலாறு – 96.22%
விஞ்ஞானம் – 93.47%
குடியியல் கல்வி – 98.46%
தமிழ் இலக்கியம் – 87.73%
ஆங்கில இலக்கியம் – 95.00%
சுகாதார மற்றும் உடற்கல்வி – 99.14%
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) – 100%


மேலும், சிங்கள மொழி, வணிகக் கல்வி, அரபு மொழி, அரபு இலக்கியம், விவசாயம் மற்றும் தொழில்நுட்பப் பாடங்களிலும் 100% சித்தி விகிதம் பதிவாகியுள்ளது.

குறிப்பாக ICT, சிங்கள மொழி, வணிகக் கல்வி, அரபு மொழி மற்றும் அரபு இலக்கியம் ஆகிய பாடங்களில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

8A சித்தி பெற்ற மாணவர்கள்

ஹமீம் அப்துல்லா, முகம்மட் வாசித் சாஹ்தி அப்துல்லா, சையித் அப்துல்லா முகம்மட் ஆபித், முகம்மட் சமீம் அம்னி அஹமட், முகம்மட் பௌசான் முகம்மட் ரஷ்தான் பாதில், முகம்மட் நஜீம் அர்ஹாப் ஹசன், அப்துல் ரஹ்மான் அப்துல் ஆதில், முகம்மட் அலி ஜின்னா அஹ்சாப் ருஹைம், அப்துல் சமத் அஹமட் சஜ்ஜாத், நிஸாப்தீன் அகிப், முகம்மட் ரபீக் முகம்மட் மிர்பாக், அஹமட் ஹஸ்மே அஹ்மத் ஹாதிம், முகம்மட் நஜீம் முகம்மட் அபிபி ஹம்தான், முகம்மட் ஜஸீல் அக்கியாஸ் அஹமட், முகம்மட் நௌசாத் வாஃப்ரி ஸாகின், முகம்மட் ஜபீர் அஹமட் அன்ஃபாஸ், கபீர் தகீ ஹுசைன், அப்துல் கபூர் முகம்மட் ராபித் மற்றும் முகம்மட் பாரி உபைதுல்லா ஆகியோர்.

7A சித்தி பெற்ற மாணவர்கள்

அப்துல் அஷ்ரப் அப்துல்லா இபாத் அதீல், ஜிப்ரி முகம்மட் அஹ்வாஜ் ஷப்கி, முகம்மட் பலீல் முகம்மட் சாஹ்ல் பிக்ரி, முகம்மட்  மீர்சா முகம்மட் நேமி அஸ்ரிம், நஸீம் அப்துல்லா ஷிமாம், முகம்மட் ஜஹாங்கீர் முகம்மட் மஹ்ரூஸ், அனீஸ் ஷுமைல் ஷாஹ்தி, பைஸ் முகம்மட் ஹமீத் அம்ஹர், அன்வர் முகம்மட் சைப் தஹ்மி, முகம்மட் பைசார் முகம்மட் அல்ஷாத், மன்சூர் முகம்மட் நுஸ்கி, முகம்மட் ஸிராஜ் ரிபாத் அஹமட், மன்சூர் முகம்மட் நஸாத் மற்றும் முகம்மட் இந்ஷாத் முகம்மட் இமாத் ஆகியோர்.

பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் நிர்வாகத்தினர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் அமைப்பு என்பன மாணவர்களின் இச்சிறப்பான சாதனைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பெற்றோர்களின் அர்ப்பணிப்பான ஒத்துழைப்பிற்கும் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பெறுபேறுகள் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் உயர்ந்த கல்வித் தரத்தையும், அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் அமைப்பு, பெற்றோர் மற்றும் மாணவர்களின் கூட்டு முயற்சியின் வெற்றியையும் பிரதிபலிப்பதாக கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலைப் பரீட்சைகள் மற்றும் மதிப்பீட்டு பிரிவினால் தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு அறிக்கையின்படி, எதிர்காலத்திலும் இதுபோன்ற சிறப்பான பெறுபேறுகளை நோக்கி மாணவர்கள் தொடர்ந்தும் பயணிப்பார்கள் என்ற நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :