இலங்கையில் 96 வருடங்கள் ஜீவ சேவையாற்றிவரும் இராமகிருஷ்ண மிஷினின் மற்றுமொரு சேவை நிலையம் எதிர்வரும் ஐந்தாம் தேதி தைப்பூச தினத்தன்று நுவரேலியா கொட்டகலையில் ஆரம்பமாக இருக்கின்றது.
"சிவானந்த நலன்புரி நிலையம்" என்ற பெயரில் மலையகத்திற்கான முதலாவது சேவைகள் நிலையத்தின் அடிக்கல் நாட்டுவிழா ஞாயிறன்று(5) காலை 9 மணிக்கு இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மகராஜ் தலைமையில் நடைபெற இருக்கின்றது .
அங்கு, கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜியின் பஜனைகள் வேதபாராயணம் சகிதம் அடிக்கல் நாட்டுவிழா இடம் பெறும்.
இ.கி.மிஸனின் மட்டக்களப்பு மாநில தலைவர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் வரவேற்புரை மற்றும் அறிமுகவுரை நிகழ்த்த இருக்கிறார்கள்.
ஹரிங்டன் தோட்டத்தில் அதற்கான நிலத்தை சீமான் விஜயபாலன் செட்டியார் மிஷனுக்கு வழங்கி வைத்து உரையாற்ற இருக்கின்றார் .
மேலும்,நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.கே.நந்தன கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்.. பிரதேச விகாராதிபதி திஸ்ஸமகாராமய தம்மஜோதி கலந்து சிறப்பிக்கிறார்.
இதற்கென்று நாடெங்கிலும் இருந்து இராமகிருஷ்ண மிஷன் பக்தர்கள் அபிமானிகள் கொட்டகலை செல்ல இருக்கின்றனர்.
0 comments :
Post a Comment