75வது சுதந்திர தினத்தையொட்டி உணவு உற்பத்திஊக்குவிக்க அம்பாறை அரச அதிபர் டக்ளஸ் திருக்கோவில் விஜயம். மலையக மரக்கறிகளின் விளைச்சல் கண்டு வியந்தார்.



வி.ரி.சகாதேவராஜா-
லங்கையின் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு உற்பத்தி கிராமங்களை உருவாக்கும் தேசிய வேலைத் திட்டத்தைப் பார்வையிட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் நேற்று முன்தினம் (30) திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார்.

தேசிய வேலைத் திட்டத்தின்கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு கிராம விவசாயிகளினால் பரீட்சார்த்தமாக பயிரிடப்பட்டுள்ள கரட் பீட்றூட் சிவப்புக்கோவா மற்றும் வெள்ளைக் கோவா உருளைக்கிழங்கு போன்ற மலைநாட்டு மரக்கறிப் பயிர்களின் சம்பிரதாயபூர்வமான அறுவடை நிகழ்வும் இடம்பெற்றது.

மலையக மரக்கறிகளின் விளைச்சல் கண்டு அரச அதிபர் டக்ளஸ் வியந்தார்.

மேலும் அவர் உணவு உற்பத்தி மாதிரி கிராமங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களை பார்வையிட்டார்.

இக் கள விஜயமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஒழுங்கமைப்பில் திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிகுடியாறு மீள்குடியயேற்ற விவசாய உணவு உற்பத்தி மாதிரி கிராமங்களை மையப்படுத்தியதாக அமைந்தது.

இக் களவிஜயத்தின்போது அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனஸ் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் .
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்தும் உணவுப் பஞ்சத்தில் இருந்தும் நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தினால் தற்போது தேசிய வேலைத்திட்டமாக உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவது தெரிந்ததே.

அந்தவகையில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச செயலாளரின் நெறிப்படுத்திலின் ஊடாக திட்டமிடல் பிரிவின் கீழ் முன்மாதிரி சௌபாக்கிய விவசாய உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் முதல் விஜயத்தை திருக்கோவிலுக்கு மேற்கொண்டு அதனைப் பார்வையிட்டதுடன் செயலகத்தில் கலந்துரையாடலொன்றையும் நடாத்தினார்.
இறுதியில் பிரதேச செயலக செயற்பாடுகளில் பூரணதிருப்தி தெரிவித்து அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :