மாஞ்சோலை அஸ் - ஸபா கழக சீருடை அறிமுக போட்டியில் கல்குடா யங் ஸ்டார் வெற்றிஎச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பதுரியா - மாஞ்சோலை அஸ் - ஸபா விளையாட்டுக் கழக கிரிக்கெட் அணியின் சீருடை அறிமுக நிகழ்வும், கிரிக்கெட் போட்டியும் (16) ஆம் திகதி மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இதில், அஸ் - ஸபா அணியுடன் கல்குடா யங் ஸ்டார் அணி மோதிக்கொண்டது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்குடா யங் ஸ்டார் அணியினர் 15 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அஸ் - ஸபா அணியினர் 15 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தனர்.

இப்போட்டியில், 20 பந்துகளுக்கு 47 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட யங் ஸ்டார் அணி வீரர் முபாரிஸ் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாண பொறுப்பதிகாரி ஏ.எல்.ஜுனைட் நளீமி, மாஞ்சோலை கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.ஜீ.எம்.பஸ்லி, அல் ஹிரா வித்தியாலய அதிபர் எம்.சீ.ஜிப்ரி கரீம், பதுரியா அல் மினா வித்தியாலய அதிபர் எம்.ஐ.உபைத்துல்லாஹ், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி இ.எல். பதுர்தீன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பீ.எம்.நூர்தீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :