அம்பாறையில் கடல் மீன்களின் விலை அதிகரிப்புFAROOK SIHAN-
ம்பாறை மாவட்டத்தில் அதிகளவான மீன்களின் பிடிபாடு அதிகரித்த போதிலும் மீன்களின் விலை அதிகரித்து காணப்படுகின்றது.குறித்த மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபை நிந்தவூர் பிரதேச சபை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அதிகளவு மீன்கள் பிடிக்கப்பட்டதை அடுத்து விலைகள் அதிகரித்துள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி தற்போது தொடர்வதன் காரணமாக மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக இவ்வாறு விலை அதிகரிப்பை மேற்கொண்டள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால் சூரை ஒரு கிலோ 1800 ரூபாய் முதல் 2550 வரை விற்பனை செய்யப்பட்டதுடன் முரல் ஒரு கிலோ 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.அத்தோடு ஒரு கிலோ விளைமீன் 1000 ரூபாவாகவும் பாரை மீன் ஒரு கிலோ 2500 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 1700 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 1600 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 800 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 3000 ரூபாயாகவும் வளையா மீன் 2600 ரூபா திருக்கை மீன் ஒரு கிலோ 2600 ஆகவும் தற்போது மீனவர்கள் மற்றும் வியாபாரிகளினால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகள் மீன் சந்தைகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இருந்தபோதிலும் கல்முனை மாநகர சபை பிரதேசத்திற்குபட்ட மருதமுனை , கல்முனை, பாண்டிருப்பு , சாய்ந்தமருது ,நற்பிட்டிமுனை பகுதிகளில் அதிகளவான விலை ஏற்றங்கள் தான்தோன்றித்தனமாக சில மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .இதனை கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.இருந்தபோதிலும் சில மீனவர்கள் மீன்களின் விலை ஏற்றங்கள் காலத்திற்கேற்ப மாறுபடும் என்பது தவிர்க்க முடியாது என தெரிவித்தனர்.

மேலும் இப்பகுதியில் மாரி கால பருவ மழை இன்மையினால் அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.அத்துடன் கருவாடு வகைகளின் விலையும் இப்பகுதியில் அதிகரித்து வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :