றிஸ்லி முஸ்தபாவின் கல்வி உதவித்திட்டம் அங்குராப்பணம் !!எம். என். எம். அப்ராஸ்-
கொரோனா தொற்று நிலை காரணமாக பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி நடவடிக்கை ஸ்தம்பிதம் அடைந்த நிலையில் கற்றல் செயற் பாடுகள் இணைய இணைப்பு மூலம் மேற்கொள்ளப் பட்டுவருகின்றது

இவ் கொரோனா நிலை காரணமாக இணைய (online)இணைப்பு மற்றும் தொழிநுட்ப வசதிகள் இன்றி கல்விநடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் சில மாணவர்கள் காணப்படுகின்றனர்
இந் நிலையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மிகவும் கஷ்ட நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கில் பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி முக்கியஸ்தகரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் உறுப்பினர் றிஸ்லி முஸ்தபாவின் சமூக சேவைக்குழுவினரால் உதவி மேற்கொள்ளபடவுள்ளது

கல்வி நடவடிக்கைக்கு உதவி செய்யும் முகமாக இதனை அங்குராப்பணம் செய்யும் ஆரம்ப நிகல்வு கல்முனையில் உள்ள ரிஸ்லி முஸ்தபாவின் காரியாலத்தில் நேற்று (07) மாலை இடம்பெற்றது .
இதன் போது தெரிவு செய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கு உதவி தொகை மற்றும் டேப் எனபன ரிஸ்லி முஸ்தபாவினால் வழங்கி வைக்கப்பட்டது

மேலும் அம்பாறை மாவட்டத்தில் கல்வி நடவடிக்கை மேற்கொள்ள மிகவும் கஸ்ட நிலையில் உள்ளமாணவர்கள் தங்களின் மாணவர் விபரம்,கல்வி சான்றிதழ் தேவைப்படும் உதவியின் வகை போன்றவற்றை
myownmediaunit@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம்
தேவையான கல்வி சார் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :