இஸ்ரேலில் உள்ள இலங்கை மக்களுக்கு அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை!



J.f.காமிலா பேகம்-
காஸாவில் இடம்பெற்று வருகின்ற போர் நிலவரத்திற்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்களுக்கு இலங்கை அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.
சுமார் 5000 இலங்கையர்கள் இஸ்ரேலில் தொழில்புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழலுக்கு மத்தியில் டெல் அவிவ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் அங்குள்ள இலங்கை மக்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, மக்கள் ஒன்றுகூடுகின்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், அநாவசிய பயணங்களைத் தவிர்க்கும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாகவே செயற்படும்படியும் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :