மற்றுமொரு பெண் தாதி கொரோனாவினால் மரணம்!



J.f.காமிலா பேகம்-
லங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது சுகாதார சேவை பணியாளரது மரணம் கண்டி பேராதனையில் பதிவாகியிருக்கின்றது.

பேராதனை போதனா மருத்துவமனையின் சுகாதார பணியாளரான 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு நேற்று உயிரிழந்திருக்கின்றார்.

கண்டி – தலாத்துஓயாவைச் சேர்ந்த இந்தப் பெண் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளை கொண்டிருந்த நிலையில் 21ஆம் திகதி பி.சி.ஆர் செய்யப்பட்டபோது தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே அவர் நேற்று உயிரிழந்திருக்கின்றார். கண்டி மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கராப்பிட்டிய, திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளில் கர்ப்பிணிப் பெண்கள் இருவருக்கும், ராகம வைத்தியசாலையில் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இவ்வாறு தொற்றுக்கு இலக்கான கர்ப்பிணிப் பெண்கள் அந்தந்த வைத்தியசாலைகளில் தாதிப் பெண்களாகக் கடமையாற்றுகிறவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :