நிந்தாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று மேற்கொண்ட 14 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு மட்டும் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் Dr.பறூசா நக்பர் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் Dr.பறூசா நக்பர் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், இணைந்து மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனையின் போதே இந்த பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

0 comments :
Post a Comment