பொத்துவிலிற்கு தனியான கல்வி வலயம்; நீண்ட கால தேவை - பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்



பொத்துவில் பிரதேசத்தின் நீண்ட கால தேவையான தனியான கல்வி வலயம் அமைக்கப்படுவது அவசியம் என்பதை பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
வரவு – செலவுத் திட்ட, கல்வி அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொத்துவில் பிரதேசத்தின் கல்வி வலயம் சம்பந்தமான பிரச்சினை குறித்து நாங்கள் நீண்ட காலமாக கதைத்து வருகின்றோம். பொத்துவில் பிரதேசமானது அம்பாறை மாவட்டத்தின் தென் பகுதியில் அமையப் பெற்றுள்ளது என்ற அடிப்படையில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தோடு இணைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால், மிக நீண்ட தூரம் பயணித்து தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காண வேண்டிய நிர்பந்தம் பொத்துவில் பிரதேச மக்களுக்கு மிக நீண்ட காலமாக இருந்து வருகின்றது.

இப்பிரச்சினைக்கு தீர்வாக இப்பிரதேசத்திற்கென தனியான கல்வி வலயமொன்றை அமைத்துகொள்ள வேண்டுமென்ற முயற்சியில் இதுவரை பல கட்டங்களை தாண்டி வந்திருக்கின்றோம். கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதியோடு இவ்விடயம் தொடர்பிலான கோரிக்கைகள் கல்வி அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டு, குறித்த விவகாரம் இதுவரையில் தீர்க்கப்படாமல் இருப்பது அப்பிரதேச மக்களுக்கு பெரும் சிக்கலாக தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
எனவே, இப்பிரச்சினையை கவனத்தில் எடுத்து பொத்துவில் பிரதேசத்திற்கென தனியான கல்வி வலயமொன்று அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். குறைந்த பட்சம் 50 பாடசாலைகளாவது இருக்க வேண்டுமென்ற நியதிக்கு சற்று புறம்பாக இவ்விவகாரம் கையாளப்பட வேண்டும். ஏனென்றால், அப்பிரதேச மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிர்பந்தமும், அவர்களது வளப் பங்கீடு மற்றும் ஆளனி குறைப்பாடு சம்பந்தமான பிரச்சினைகளும் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்ற நிலைமை காணப்படுகின்றது என்ற காரணத்தினால் தான் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இவ்விவகாரத்தை தொடர்;ந்து லபுகல பிரதேசத்திலுள்ள சிங்களப் பாடசாலைகளில் இருக்கின்ற ஆசிரியர்களின் தேவைப்பாடுகளுக்காக அம்பாறை வரை போக வேண்டிய நிர்பந்தம் இருக்கின்றது. எனவே, அதற்கு உதவியாக அந்தப் பாடசாலைகளுக்கும் சேர்த்து இந்தக் கல்வி வலயம் பொத்துவில் பிரதேசத்தில் உள்ளடக்கியதாக தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கென்று அமைக்கப்படலாம் என்பதையும் கொள்கை ரீதியாக கல்வி அமைச்சிடம் முன்வைத்துள்ளோம். கல்வி அமைச்சர் இதில் கவனம் செலுத்தி இதற்கு உரிய தீர்வைப் பெற்றுத் தர வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :