என்ன காரணத்துக்காக 21000 க்கும் மேற்பட்ட போதை குளிசைகளை மஹர சிறையில் வைத்திருந்தார்கள் என தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த குளிசைகள், போதை வஸ்து பாவிப்பவர்களுக்கு ஒரு வகையில் போதைக்காக பாவிப்பதற்கு உதவக்கூடியதாக இருந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. எதற்காக இவ்வளவு பெரிய தொகை மருந்துகளை, குறித்த வைத்தியரின் கட்டளையின் கீழ் இவ்வைத்திசாலைக்கு தருவிக்கப்பட்டன எனவும் தற்போது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.சிறைச்சாலை வைத்தியரின் நடவடிக்கைகள் சம்பந்தமாக தற்போது விசாரணையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வழமையாக ஒரு வருடத்துக்கு தேவையான மருந்துகளை ஒரேயடியாக கட்டளையிட்டு பெற்றுக்கொள்வதாக மஹர சிறை வைத்தியசாலை பேச்சாளர் காரணம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒருநாளைக்கு சுமார் 100 பேர் சிகிச்சை பெறுவதாகவும் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment