ஜே.எப்.காமிலா பேகம்-
உடன் அமுலுக்கு வரும்வகையில் இன்று இரு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தங்காலையில் உள்ள பழைய சிறைச்சாலை கட்டிடத்தை, தடுப்புக் காவலாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் போல் ரூம் டான்சர்ஸ் விளையாட்டுக்கான தேசிய மாநாட்டின் பதிவை, உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
விளையாட்டு சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களின் படி, குறித்த நடவடிக்கையானது விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment