சுதிர் குமார் சிங் வரும் வரைக்கும் காத்திருந்த அந்த நபர், அருகில் உள்ள டீக்கடையில் தேனீர் அருந்திக் கொண்டு இருந்துள்ளார். சுதிர் குமார் சிங் வந்ததுடன் அந்த நபர் தனது தந்தையின் துப்பாக்கியால், ஆசிரியரை சுட்டுக்கொலை செய்து உள்ளனர்.
இதனால் பதற்றம் அடைந்த அருகில் உள்ளவர்கள் அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது கையில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் ஏறியுள்ளார். கையில் துப்பாக்கி இருந்ததால் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை சரண் அடைய வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அந்த நபர் போலீசாரையும் சுட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். பின்னர் போலீசாரிடம் தப்பிக்க மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
அதற்குள் பொதுமக்கள் அந்த நபரை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தும் நடக்கவில்லை. இறுதியில் அந்த நபரை அடித்தே கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியானது. இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக காவல் நிலையத்தின் இன்சார்ஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment