மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது..

க.கிஷாந்தன்-

டைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து பதுளை புகையிரத நிலையத்தை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற புகையிரதம் 20.06.2020 அன்று மாலை 6.30 மணியளவில் பட்டிப்பொல மற்றும் அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் 138வது மைல் கல் இடத்தில் வைத்து தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்படைந்தது.

குறித்த புகையிரதத்தின் காட்சிகாண் கூடம் பெட்டி தடம்புரண்டதன் காரணமாகவே மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

எனினும், 21.06.2020 அன்று அதிகாலை 4 மணியளவில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -