52 நாள் அரசாங்கத்தில் களவுபோன அரிசி தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விளக்கம்’ -ரிஷாட்!

ஊடகப்பிரிவு -

தொச களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் கொள்ளளவானது, 52 நாள் அரசாங்க காலத்தின்போது குறைந்திருந்தமை தொடர்பில், எனது வேண்டுகோளின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னர் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரமே, நேற்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விளக்கமளித்தேன்” என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஊடகவியலாளரிடம் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“2018 டிசம்பர் 20 ஆம் திகதி மீண்டும் நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், எனது அமைச்சின் கீழான சதொச நிறுவனத்தின் தலைவர், 52 நாள் ஆட்சிக் காலத்திலே களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த அரிசி களவுபோயுள்ளதாக தெரிவித்தார்.

எனவேதான், இந்த முறைகேடு தொடர்பாக உள்ளகக் கணக்காய்வு திணைக்களத்தின் அறிக்கையை பெற்று, அந்த அறிக்கையை அரசாங்க பொதுக் கணக்காய்வு திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறும், களவு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்யுமாறும், நான் அதிகாரிகளை பணித்தேன். அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே என்னிடம், இது தொடர்பிலான விளக்கத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பெற்றுக்கொண்டனர்” என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -