கறுப்பு பட்டியணிந்து பணியாற்றிய தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்



பல்கலைக்கழக ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமான Federation of University Teachers’ Associations (FUTA) முன்னெடுத்துள்ள “Black Week” நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (16) கறுப்பு பட்டியணிந்து தங்களது பணிகளை முன்னெடுத்தனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த அடையாள எதிர்ப்புச் செயற்பாட்டில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் கறுப்பு பட்டியணிந்து கலந்துகொண்டனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம் அவர்களின் வழிகாட்டலுடனும், சங்கத்தின் செயலாளர் கலாநிதி எம்.சி. அலிபூட்டோ அவர்களின் நெறிப்படுத்தலுடனும் இந்த எதிர்ப்புச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்தை ஈர்ப்பதுடன், பொதுமக்களுக்கும் இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும்.

FUTA இன் 12 செப்டெம்பர் 2026 அன்று நடைபெற்ற பிரதிநிதிகள் சபை (BOR) கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, செப்டெம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகும் வாரம் “Black Week” என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக செப்டெம்பர் 16ஆம் திகதி பல்கலைக்கழக ஆசிரியர்கள் கறுப்பு உடையணிந்து பணியாற்றுமாறு அனைத்து இணை ஆசிரியர் சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் இன்று பட்டியணிந்து பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து வழமையான கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளை முன்னெடுத்தனர். விசேடமாக இன்று இடம்பெற்ற மூதவை கூட்டத்திலும் குறித்த கறுப்புப்பட்டியணிந்த நிலையில் விரிவுரையாளர்கள் காணப்பட்டனர். இதன் மூலம் தங்களது கோரிக்கைகளுக்கு அடையாள ரீதியான ஆதரவை வெளிப்படுத்தியதுடன், பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கை அமைந்தது.

FUTA தீர்மானங்களின்படி, எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும் வாரம் “Public Awareness Week” ஆக முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தக் காலப்பகுதியில் ஊடக சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நடத்துமாறு இணை ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பில் உறுப்பினர்களின் கருத்து மற்றும் சம்மதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக செப்டெம்பர் 18ஆம் திகதிக்குள் விசேட பொதுக்கூட்டங்களை (Special General Meetings) நடத்துமாறும் FUTA அறிவுறுத்தியுள்ளது. எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்தக் கூட்டங்களில் உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்படவுள்ளன.

அத்துடன், பொதுமக்கள் விழிப்புணர்வு வாரத்தின் போது ஒவ்வொரு ஆசிரியர் சங்கமும் தத்தமது பிரதேசங்களுக்கு அருகிலுள்ள நகரங்களில் உள்ளூர் மட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் FUTA கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற பட்டியணிந்த அடையாள எதிர்ப்புச் செயற்பாடு, பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமான Federation of University Teachers’ Associations (FUTA) முன்னெடுத்துள்ள “Black Week” நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (16) கறுப்பு பட்டியணிந்து தங்களது பணிகளை முன்னெடுத்தனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த அடையாள எதிர்ப்புச் செயற்பாட்டில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் கறுப்பு பட்டியணிந்து கலந்துகொண்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம் அவர்களின் வழிகாட்டலுடனும், சங்கத்தின் செயலாளர் கலாநிதி எம்.சி. அலிபூட்டோ அவர்களின் நெறிப்படுத்தலுடனும் இந்த எதிர்ப்புச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்தை ஈர்ப்பதுடன், பொதுமக்களுக்கும் இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும்.

FUTA இன் 12 செப்டெம்பர் 2026 அன்று நடைபெற்ற பிரதிநிதிகள் சபை (BOR) கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, செப்டெம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகும் வாரம் “Black Week” என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக செப்டெம்பர் 16ஆம் திகதி பல்கலைக்கழக ஆசிரியர்கள் கறுப்பு உடையணிந்து பணியாற்றுமாறு அனைத்து இணை ஆசிரியர் சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் இன்று பட்டியணிந்து பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து வழமையான கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளை முன்னெடுத்தனர். இதன் மூலம் தங்களது கோரிக்கைகளுக்கு அடையாள ரீதியான ஆதரவை வெளிப்படுத்தியதுடன், பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கை அமைந்தது.

FUTA தீர்மானங்களின்படி, எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும் வாரம் “Public Awareness Week” ஆக முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தக் காலப்பகுதியில் ஊடக சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நடத்துமாறு இணை ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பில் உறுப்பினர்களின் கருத்து மற்றும் சம்மதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக செப்டெம்பர் 18ஆம் திகதிக்குள் விசேட பொதுக்கூட்டங்களை (Special General Meetings) நடத்துமாறும் FUTA அறிவுறுத்தியுள்ளது. எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்தக் கூட்டங்களில் உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்படவுள்ளன.

அத்துடன், பொதுமக்கள் விழிப்புணர்வு வாரத்தின் போது ஒவ்வொரு ஆசிரியர் சங்கமும் தத்தமது பிரதேசங்களுக்கு அருகிலுள்ள நகரங்களில் உள்ளூர் மட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் FUTA கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற பட்டியணிந்த அடையாள எதிர்ப்புச் செயற்பாடு, பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :