பெரிய நீலாவணை கடற்கரையில் இன்று காலை கரைவலை மீனவர் ஒருவரின் வலையில் மாட்டிக்கொண்ட அபூர்வ சுறா இன மீன் ஒன்று சுமார் ஆயிரம் கிலோ இடைகொண்டதாக கரைக்கு இழுத்து எடுக்கப்பட்டதும் அதனை மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இம்போட்மிரர் செய்தியாளர் சிறிதரன் தெரிவிக்கையில்:
குறித்த மீன் பெரிய நீலாவனை திருநா என்பவரின் வலையிலேயே சிக்கி கரைக்கு வந்தது. ஆனால் இதனைக் கேள்வியுற்ற நீரியல் வளத்துறையினர் ,விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் ஆகியோர் குறித்த இடத்துக்கு வருகை தந்தனர். அதன் பின்னர் இந்த மீன் இனமானது அருகி வரும் ஒன்று என்றும் இது சமைப்பதற்கு உகந்தது அல்ல என்று அவர்கள் கேட்டுக்கொண்டதற்கமைய மீனவர்கள் அதனை கடலுக்குள் மீண்டும் அனுப்பி விட்டனர்.
குறித்த மீனின் வருகையை கேள்வியுற்ற பிரதேச மக்கள் சற்று முன்னர் மீனைப்பார்பையிட கடற்கரையை நோக்கி படையெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
