பஸ் கட்டணங்கள் எக்காரணத்தை கொண்டும் அதிகரிக்கப்படாது-அமைச்சர் மஹிந்த அமரவீர

க்கள் மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் தனியார் பஸ் கட்டணங்கள் எக்காரணத்தை கொண்டு அதிகரிக்கப்படாது என போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்படும் வருமான இழப்புகளை தாங்கிக்கொள்ள மாற்றுப் பொறிமுறையூடாக நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பது குறித்து கலந்துரையாடல்களை நடத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

“சுகாதார அமைச்சு வழங்கியுள்ள சுகாதார ஆலோசனைகளுக்கு அமையவே பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரை சொகுசு மற்றும் சாதாரண பஸ்களின் கட்டணத்தை 1.5சதவீத்தால் அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

எக்காரணத்தை கொண்டும் இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது. என்றாலும் இந்தத் தொழிலை முன்னெடுத்துச் செல்வது கடினமாகவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறுகின்றனர். அதற்கு மாற்று நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். கொரோனா வைரஸ் தொற்று பரவும் காரணிகளில் மிகவும் சாதகமானதாக பயணிகள் போக்குவரத்துச் சேவை காணப்படுவதாக சுகாதார துறையினர் அடையாளப்படுத்தியுள்ளனர். அதன் காரணமாக சுகாதார துறையினரின் ஆலோசனைகளுக்கு அமையவே அரசாங்கம் செயற்படும்.

இதேவேளை, கடந்தவாரம் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எக்காரணத்தை கொண்டும் பஸ் கட்டணங்களை அதிகரிக்க அரசாங்க நடவடிக்கையெடுக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுட்டிக்காட்டியுள்ளார்” எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -