முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பொய் மூட்டைகளை இன்னும் நம்ப தயாரில்லை-வேட்பாளர் தாஹீர்

பாறுக் ஷிஹான்-

முஸ்லிம் காங்கிரஸிக்கு மக்கள் வாக்களிக்க தயாரில்லை எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பொய் மூட்டைகளை இன்னும் நம்ப தயாரில்லை என அம்பாறை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம் அஸ்ரப் தாஹீர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் மயில் சின்னம் இலக்கம் 5 இல் வேட்பாளராக போட்டியிடும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை(23) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

சுயநல மூலம் தெரிவானவர்கள் இன்று பிரதேச வாதத்தை ஊட்டி வளர்க்க முற்படுகின்றார்கள் .எமது பிரதேச வாதம் தான் எமது பிரச்சினை வளர்வதற்கு காரணமாகும்.மூன்று தடவைகள் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அதே வேட்பாளர்களை களமிறக்கி வெற்றி பெறச் செய்து வருகின்றது.

அவ்வாறு வென்றவர்கள் இதுவரை எதனை செய்தார்கள் என மக்கள் உணர வேண்டும் .இவ்வாறு உணரும் பட்சத்தில் இவர்களுக்கான பதிலை இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் வழங்குவார்கள்.

கடந்த காலங்களில் இவ்வாறானவர்கள் பதவிகளில் இருந்த போதிலும் மக்களை சந்திக்காததன் விளைவினால் இரவு பகலாக இன்று புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். எனினும் மக்கள் இம்முறை முஸ்லிம் காங்கிரஸிக்கு வாக்களிக்க தயாரில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஆகவே தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பொய் மூட்டைகளை இன்னும் நாம் உட்பட மக்கள் எவரும் நம்ப தயாரில்லை என்பதாகும்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாண மக்களின் நலனை கருத்தில் கொண்டு நீர் வழங்கல் அமைச்சரால் செய்ய முடியாத குடி நீர் வழங்கல் சேவையை நாங்கள் செய்திருக்கின்றோம்.இதனால் தான் தற்போது ஒரே ஒரு பிரதேச சபை உறுப்பினரை கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தற்போது 31 பிரதேச உறுப்பினர்களையும் இஇரு பிரதேச சபை தவிசாளர்களையும் இ ஒரு உப தவிசாளரையும் பெற்றிருக்கின்றோம் இது எமது வெற்றி என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -