அனுமதியின்றி நடாத்தி வந்த வர்த்தகநிலையங்கள் அகற்பட்பட்டது..

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-

ட்டன் பொதுச்சந்தையில் , ஹட்டன் டிக்கோயா நகரசபையின் அனுமதியினை பெறாது
வர்த்தக நிலையங்களை நடாத்தி வந்த வர்த்தக நிலையங்கள் அகற்றும் நடவடிக்கை
முன்னெடுப்பு

ஹட்டன் டிக்கோயா நகரசபையின் கிழ் இயங்கும் ஹட்டன் சக்தி கலாசார
மண்டபத்திற்கு அருகாமையில் ஹட்டன் டிக்கோயா நகரசபையினால் அனுமதிபெறாது
வர்த்தக நிலையங்கள் அமைத்து வரத்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வர்த்தக
நிலையங்கள் 19.06.2020 வெள்ளிகிழமை காலை அகற்றபட்டுள்ளது.

ஹட்டன் பிரதான பேருந்து தரிப்பிடத்திறகு போக்குவரத்தினை மேற்கொள்ளும்
பொதுமக்கள் மற்றும் பொதுசந்தை பகுதிக்கு வருகின்ற வாகனங்களை கூட
நிறுத்துவதற்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளமையினால் குறித்த அறிவுறுத்தல் முன்கூட்டியே
வழங்கப்பட்டு வந்தபோதிலும் குறித்த வர்த்தக நிலையங்களை அகற்றபடவில்லை.

ஆகையினால் இன்றைய தினம் ஹட்டன் டிக்கோயா நகரசபையினால் முன்னெடுக்கபட்ட நடவடிக்கையின் ஊடாக அனுமதிபெறாது அமைக்கபட்ட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வாகனத்தின் ஊடாக கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -