கல்முனை பொலிஸ் அரச புலனாய்வு உத்தியோகத்தர் தனக்கு தானே தலையில் சுட்டு தற்கொலை!


பாறுக் ஷிஹான்-

ரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை - கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கே.கமலராஜ் என்ற அரச புலனாய்வு உத்தியோகத்தராவார்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (பிஸ்டல்) கைதுப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.


--
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -