பொகவந்தலாவை பொலிசாருக்கு கொரோனா வைரஸ் பாதுகாப்பு அங்கி வழங்கி வைக்கப்பட்டன

ஹட்டன் கே..சுந்தரலிங்கம்-
நாட்டில் இன்று கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து .இந்த வைரஸ்ஸினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பல்வேறு துறையினர் இணைந்துள்ளன.குறித்த நபர்கள் தங்களுடை உயிரினை துச்சமாக மதித்தே நாட்டுக்காகவும் சமூகத்திற்காக செயப்பட்டு வருகின்றனர்.

இதனால் இவர்கள் அனைவரும் இந்த கொரானா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதற்கான சந்தர்ப்பங்கள் அதிமாகவே காணப்படுகின்றன. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு பிரிவினர், சுகாதாரப் பிரிவினர் மற்றும் ஊடகவியலாளர்கள் இந்த வைரஸ் தொற்று காரணமாக பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நபர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அபாய நிலவும் பகுதிகளிலிருந்து வருபவர்களையும் தனிமைப்படுத்தும் போதும் கொரோனா தொற்று நோய் அறிகுறி சந்தேகம் படும் போதும் இவர்கள் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கு அப்பிரதேச பொலிஸாரும் பொது சுகாதார உத்தியோகத்தர்களும் ஊடகவியலாளர்கள் ஆகியோருமே முதலில் செல்கின்றனர்.

குறித்த நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக பல்வேறு பரிசோதனையின் பின்னரே இனம் காணப்படுகின்றன.

இந்நிலையில் இவர்கள் தொடர்பாக அறிவதற்கு குறித்த உத்தியோகத்தர்கள் செல்வதனால் இவர்களும் இந்த அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கின்றனர்.

வைத்தியசாலைகளில் கடமை புரியும் சுகாதாரத் துறையினருக்கு வைரஸ் பரவுவதனை தடுக்கும் உடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ள போதும் பொலிஸாருக்கு ஊடகவியலாளர்களுக்கும் வழங்கப்படவில்லை.

இன்று இந்த பாதுகாப்பு அங்கிகளை பொகவந்தலாவை பொலிஸாருக்கு பிரிடோ நிறுவனம் மற்றும் தோட்டங்களில் உள்ள சமூக அபிவிருத்தி நிலைய உறுப்பினர்களினால் குறித்த பாதுகாப்பு உடைகள் (அங்கிகள்) பொலிசாருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பு உடைகள் வழங்குவதன் மூலம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தினை எவ்வித அச்சமும் பயமின்றி பாதுகாப்பான முறையில் முன்னெடுக்க முடியும் எனவும் இதனால் தங்களது குடும்பத்தினதும் தங்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த பாதுகாப்பு உடைகள் பொலிஸ் நிலையத்தில் உள்ள 10 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு உடையிலும் பொகவந்தலாவை பொலிஸார் மற்றும் பதவி முத்திரை பொறிக்கப்பட்டுள்ளன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -